கீர்த்தனாவின் காதல் திருமணம்: சந்தோஷத்தில் சீதா

Report Print Fathima Fathima in உறவுமுறை
2092Shares
2092Shares
ibctamil.com

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருதையும் வென்ற கீர்த்தனாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

Vishual Communication படித்துள்ள கீர்த்தனா இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்க்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

மார்ச் 8ம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் பார்த்திபன் திரையுலக நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்துவருகிறார்.

இவர்களது திருமணம் காதல் திருமணமாம், இதுகுறித்து சீதா கூறுகையில், அக்ஷய்யை எங்களுக்கு அவரின் ஏழு வயதில் இருந்தே தெரியும்.

இருவரும் நல்ல நண்பர்களாக பழகினார்கள், ஒன்றாகத்தான் கல்லூரியிலும் படித்தார்கள், நாங்களே தேடினாலும் இப்படி ஒரு தங்கமான மாப்பிள்ளையை பார்த்திருக்க முடியாது.

என் மகள் புத்திசாலி பொண்ணு, அக்ஷயை காதலிப்பதாக சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தோம், ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.

கீர்த்தனாவின் காதலை நான் ஆதரிக்கிறேன், மதிக்கிறேன், எட்டு வருட காதல் கல்யாணத்தில் முடிகிறது, அவரது அம்மாவும் நல்ல மனம் படைத்தவர், அப்பாவுடன் சேர்ந்து எடிட்டிங் வேலைகளை செய்து வருகிறார்.

உலகப் புகழ் பெற்ற எல்.வி.பிரசாத் அவர்களின் குடும்பத்தில் சம்மந்தம் வைத்துக் கொள்வதை பெருமையாக கருதுகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்