இலங்கை தமிழரிடம் மனதை பறிகொடுத்த பெண்: அழகாக நடந்த திருமணம்

Report Print Raju Raju in உறவுமுறை
2967Shares
2967Shares
lankasrimarket.com

இலங்கையை பூர்வீகமாக கொண்ட மேனகாவும், மயூரனும் கனடாவின் டொராண்டோவில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு சமீபத்தில் மெக்சிகோவில் திருமணம் நடந்துள்ளது.

தற்போது எம்.எஸ் ரியல் எஸ்டேட் டீம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை இருவரும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

இந்த தம்பதியின் காதலும் சரி, திருமணம் நடந்த இடத்தை தெரிவு செய்ததும் சரி இரண்டுமே மிகவும் சுவாரசியமானது தான்.

இது குறித்து மேனகாவே கூறுகிறார், நான் அறிவியலில் பட்டப்படிப்பு படித்துள்ளேன், ஆரம்பத்தில் செவிலியர் ஆக வேண்டும் என்றே விரும்பினேன்.

ஆனால் என்னுடைய தனிப்பட்ட திறமையை இந்த சமூகத்துக்கு புது விதமாக பயன்படுத்த வேண்டும் என் எண்ணி ரியல் எஸ்டேட் தொழிலை செய்ய முடிவு செய்தேன்.

Em Photography

என் கணவர் மயூரன் வணிக சந்தை பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார்.

தற்போது இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறோம்,

சரி என் காதல் கதைக்கு வருகிறேன், எங்கள் இருவருக்கும் பரஸ்பரமாக தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் தான் மயூரனை முதன் முதலில் சந்தித்தேன்.

ஆரம்பத்தில் இருவரும் மெசேஜ் மூலம் ஒருவருக்கொருவர் பேசி கொள்வோம்.

உன்னுடைய பின்னணி என்ன என்பது தான் மயூரன் எனக்கு முதலில் அனுப்பிய மெசேஜ், அதில் ரொமாண்டிக்கான விடயம் எதுவும் இல்லாத நிலையிலும் அவரின் வித்தியாசமான அணுகுமுறை என்னை ஈர்த்தது.

இப்படியே மயூரனுடன் என் நட்பு அதிகமான நிலையில், விரைவில் ஆயிரம் ஆண்டுகள் அவருடன் பழகியதை போல உணர்வு எனக்கு ஏற்பட்டது.

இப்படியே சில ஆண்டுகள் ஆன நிலையில் எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் பல ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட நிலையில் எங்கள் நட்பு காதலாக மாறியிருந்தது.

Em Photography

இதையடுத்து திருமணம செய்ய முடிவெடுத்து அதற்கு புதிய முயற்சியை கையாண்டோம்.

அதாவது, முன்பெல்லாம் திருமணம் நடக்கும் வீட்டில் ஒரு வாரத்துக்கு எல்லா விடயங்களும் களைக்கட்டும்.

உறவினர்கள் உடன் தங்கி நமது மகிழ்ச்சியில் பங்கெடுப்பார்கள், ஆனால் தற்போதெல்லாம் சில மணி நேரங்கள் மட்டும் திருமண வீட்டில் இருந்துவிட்டு உறவினர்கள் சென்றுவிடுவதோடு அதை அப்படியே மறந்துவிடுகிறார்கள்.

அதனால் எங்கள் திருமண முறையில் மூன்று விருப்பதை முடிவு செய்து அதில் ஒன்றை தெரிவு செய்ய முடிவெடுத்தோம்.

அதன்படி டொரண்டோவிலேயே கல்யாண மண்டபத்தில் திருமணம் செய்யலாமா என நினைத்தோம், எங்கள் உறவினர்கள் அதிகம் பேர் டொரண்டோவில் தான் உள்ளனர்.

இரண்டாவதாக எங்கள் பூர்வீகமான இலங்கைக்கு சென்று அங்கு திருமணம் செய்யலாமா என நினைத்தோம்.

இலங்கை மிக அழகான மற்றும் கலாச்சாரம் மிகுந்த நாடாகும், இதையடுத்து விஎம்.எஸ் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிருஷ்ணாவை மயூரன் சந்தித்தார்.

அவர் இதற்கு உதவுவதாக கூறினார், மூன்றாவதாக எங்களுக்கு மிகவும் பிடித்த மெக்சிகோவில் திருமணம் செய்ய யோசித்தோம், அங்குள்ள உணவுகள், கலாச்சாரம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அதன்படி இந்து முறைப்படி மெக்சிகோவிலேயே எங்கள் உறவினர்கள் புடைச்சூழ திருமணம் செய்ய முடிவெடுத்தோம்.

கிருஷ்ணா எங்களுக்கு பக்கபலமாக இருந்து உதவினார்.

அங்கு மிக சிறப்பாக எங்களின் திருமணம் நடந்து முடிந்தது, விலைமதிப்பற்ற அனுபவம் மற்றும் நினைவுகளுடன் டொரண்டோவுக்கு நானும் மயூரனும் திரும்பினோம்.

இது போல வேறு நாட்டுக்கு உறவினர்கள், நண்பர்கள் புடைச்சூழ சென்று திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே மற்றவர்களுக்கு என்னுடைய பரிந்துரை!

Em Photography

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்