லவ் யூ சொல்லவே இல்லை! காதல் மனைவி பற்றி நெகிழும் கயல் சந்திரன்

Report Print Printha in உறவுமுறை
434Shares
434Shares
lankasrimarket.com

கயல் பட நடிகர் சந்திரன் மற்றும் சன் டி.வி. தொகுப்பாளர் அஞ்சனா ஆகிய இருவருக்கும் கடந்த 2016-ல் திருணம் முடிந்த நிலையில் இன்று இரண்டாவது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

ஒரே அலுவலகத்தில் வேலை செய்த போது வராத லவ், வாட்ஸ் அப் சாட்டிங், டுவிட்டரில் லைக் போட்ட போது வந்ததாக இந்த காதல் ஜோடி கூறுகின்றனர்.

ஆம்.., அஞ்சனா நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய தனியார் தொலைக்காட்சியில் நான் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றினேன்.

அப்போது அஞ்சனாவிற்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது, இருவரும் நண்பர்களாக பழகினோம், ஆனால் அப்போது எல்லாம் எங்களுக்கு காதல் எதுவுமில்லை.

ஆனால் கயல் படம் முடிந்த பின்னரே எங்களுக்குள் காதல் மலர்ந்தது, நான் அஞ்சனா போல அழகுள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என் அம்மாவிடம் சொன்னேன்.

அப்போது, அவர் ‘‘நீ அஞ்சனாவையே திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே'' என்று கூறினார்.

அதன் பிறகு தான் தைரியமாக அஞ்சனாவிடம் என் காதலை சொன்னேன்.

அஞ்சனாவிடம் ஐ லவ் யூ என்றெல்லாம் சொல்லவில்லை. ‘நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா' என்று தான் கேட்டேன்.

அவர் மிகுந்த சந்தோஷத்துடன் சரி என்று கூறிவிட்டார். ஆனால் அவர் திருமணத்திற்கு சம்மதிப்பார் என்று நான் எதிர்பார்க்க கூட இல்லை.

அஞ்சனா சரி என்று சொன்ன வார்த்தை என்னை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

அதன் பிறகு தான் நாங்கள் காதலித்து இரு வீட்டார் சம்மத்தோடு திருமணம் செய்துக் கொண்டோம்.

இப்போது நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து மகிழ்ச்சியுடன் வாழ்கின்றோம் என்று சந்திரன் கூறியுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்