தேர்வால் ஒன்றிணைந்த இதயங்கள்: சுவாரசியமான காதல் திருமணம்

Report Print Fathima Fathima in உறவுமுறை

இந்தியாவில் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த பெண்ணும், இரண்டாம் இடம் பிடித்த ஆணும் திருமணம் செய்து கொண்ட சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த தேர்வில் முதலிடம் பிடித்தவர் டினா டபி(வயது 25), இரண்டாம் இடம் பிடித்தவர் அதார் ஆமீர் உல் ஷபி கான்(வயது 26).

தலித் சமூகத்தை சேர்ந்த டினாவும், காஷமீரை சேர்ந்த ஆமீரும் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பெருமையாக பேசப்பட்டது.

ஒரே அகாடமியில் இவர்கள் படித்ததால், இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.

தேர்வில் வெற்றி பெற்றதும் ராஜஸ்தான் மாநிலத்திலேயே இருவருக்கும் பணியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தெற்கு காஷ்மீரின் பாஹல்கம் பகுதியில் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இப்புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்