கணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்? கைப்பேசியை ரகசியமாக சோதனை செய்ததால் பிரச்சனை

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,

ஜெயாபச்சனின் 70-வது பிறந்த நாளை குடும்பத்தினர் விருந்து வைத்து விமரிசையாக கொண்டாடினார்கள். அதில் ஐஸ்வர்யாராய் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கணவர் அபிஷேக் பச்சன் மீது சந்தேகித்து அவரது செல்போனை எடுத்து போன் நம்பர்கள் மற்றும் வாட்ஸ் அப் தகவல்களை ஐஸ்வர்யாராய் ஆய்வு செய்ததாகவும் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தனித்தனியாக வசிப்பதாக கூறப்படுகிறது.

இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என் கணவரை நான் சந்தேகப்படுவது இல்லை அவரது செல்போனை எடுத்து பார்ப்பதும் இல்லை என்று ஐஸ்வர்யாராய் ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில்தான் இருவரும் தனித்தனியாக வசிப்பதாக வீடியோ தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்