திருமண வாழ்வில் 20 ஆண்டுகளுக்கு பின்னரே மகிழ்ச்சி: ஆய்வில் தகவல்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

திருமணமாகி 20 வருடங்களுக்கு பின்னரே தம்பதியினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிரிகாம் இளைஞர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து திருமணமான 2034 தம்பதிகளை தேர்வு செய்து அவர்களிடம் ஆய்வு நடத்தினர்.

இவர்களின் பெண்கள் சராசரி வயது 35 கொண்டவர்களாகவும், ஆண்கள் சராசரி வயது 37 கொண்டவர்களாகவும் இருந்தனர்.

கணவன்-மனைவி இருவரும் திருமணமாகி எந்த காலக்கட்டத்தில் தாம்பத்திய வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது,

திருமணமான தொடக்க ஆண்டுகளை விட பிந்தைய காலத்தில் தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியாக இருந்ததாக தெரியவந்தது.

20 ஆண்டுகளுக்கு பிறகு தாம்பத்திய வாழ்க்கையின் ஆர்வம் மேலும் அதிகரித்து கணவன்- மனைவி இருவரும் மிகவும் நெருக்கமாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.

இதன்படி பார்க்கும் போது கணவன்-மனைவிக்கு இடையே தாம்பத்திய வாழ்க்கையின் ஆர்வம் திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு தான் அதிகரிக்கிறது என தெரியவந்துள்ளது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்