இலங்கை தமிழருடன் நடிகை ரம்பாவுக்கு காதல் மலர்ந்தது எப்படி?

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

1993 ஆம் சினிமா திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா.

ஆந்திராவை சேர்ந்த ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. இவர் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பரை காதலித்து 2010 ஆம் திருமணம் செய்துகொண்டார்.

கனடாவை சேர்ந்த மேஜிக் உட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரன் பத்மநாதன்.

இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ரம்பா நியமிக்கப்பட்டார். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர். முதலில் இந்திரனுக்கு ரம்பாவை பிடித்துப்போனது. அதன்பின்னர், தனது விருப்பத்தை ரம்பா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.

திருமணத்திற்கு முன்னரே ரம்பாவுக்கு 1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை இந்திரன் பரிசளித்தார்.

மேலும், தனது காதலை வித்தியாசமாக தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, விமானத்தில் பறந்து சென்று, நடுவானில் வைத்து தனது காதலியின் கையில் மோதிரம் மாட்டிவிட்டு, அழகிய பூங்கொத்தை கொடுத்து தனது காதலை தெரியப்படுத்தியுள்ளார்.

இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் இருவரது திருமணமும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருப்பதியில் நடந்தது. திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் நடிகை ரம்பா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு கனடாவில் செட்டில் ஆனார்.

இவர்களுக்கு லாண்யா, சாஷா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் நடைபெற்று 2 வருடங்களுக்கு பின்னர் இவர்களது உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.

இதனால் விவாகரத்து கோரிய இவர்கள், பின்னர், தனது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது கணவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக ரம்பா தெரிவித்தார். இதனையடுத்து இவர்கள் இணைந்தனர்.

இவர்கள் இணைந்தபின்னர் கடந்த ஆண்டு முதல் முறையாக ரம்பா, யாழ்ப்பாணத்தின் சுதுமலை பிரதேசத்தில் உள்ள தனது கணவரின் இல்லத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers