திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான ஸ்ரீதேவி: போனி கபூரை திருமணம் செய்துகொண்டது எப்படி?

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
958Shares
958Shares
ibctamil.com

ஸ்ரீதேவியின் தனிப்பட்ட வாழ்க்கை ஏற்ற இறக்கம் கொண்டதே.

ஸ்ரீதேவி திரையில் உச்ச நட்சத்திரமாக இரவுபகல் என்ற வித்தியாசம் இல்லாமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் போனிகபூரை சந்தித்தார்.

போனி கபூர்ஒரு முறை பேட்டியின்போது, ஸ்ரீதேவியை நான்முதன்முதலில் திரையில் பார்த்ததுமே அவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்பட்டது.

70 களில் தமிழ் திரைப்படத்தில் அவரை முதன்முதலாக பார்த்தேன், படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக சென்னைக்கு சென்று அவரது சம்மதம் வாங்கினேன்.

எனது படங்களில் ஸ்ரீதேவி நடிக்கையில், அவருக்காக அருமையான ஆடைகளை தயார் செய்து வைத்திருப்பேன், அந்த அளவுக்கு நான் அவரை காதலித்தேன் .

ஆனால், ஸ்ரீதேவி, போனியின் திருமணம் நடப்பத்தி சிரமம் இருந்தது. ஏனெனில், போனிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர்.

ஆனால், ஸ்ரீதேவி மீது இருந்த காதலால், அவரை திருமணம் செய்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார் போனி.

ஸ்ரீதேவியின் தாயாருக்கு நோய் ஏற்பட்டது முதல் அவர் இறக்கும் காலகட்டமே போனி கபூருடன் ஸ்ரீதேவிக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுத்த ஸ்ரீதேவி

சென்னையில் போனி கபூர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் சென்றுள்ளார் ஸ்ரீதேவி.

மதிய உணவு முடித்த பின்னர், ஸ்ரீதேவியை அவரது வீட்டில் கொண்டுபோய் போனி விட்டுள்ளார். இந்த பயணத்தின்போது ஸ்ரீதேவியிடம் காதலை சொல்லியுள்ளார்.

இதனை கேட்டுகோபம் கொண்ட ஸ்ரீதேவி, 8 மாதங்களாக போனியுடன் பேசவில்லை.

1993ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தது.

அப்போது ஸ்ரீதேவி சீராக் ஹோட்டலில் தங்கியிருந்தார். குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த உடன் ஸ்ரீயின் அம்மாவுக்கு போன் செய்து பேசி அவரின் அனுமதியுடன் ஸ்ரீதேவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார் போனி.

1993ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஸ்ரீதேவி போனி வீட்டில் தங்கினார். அப்போது அவரின் கோபம் மாறி சமாதானம் ஆனார்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும் அவர் மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது என்றார் போனி கபூர்.

திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமானஸ்ரீதேவி

தாயார் இறந்தபின்னர்,அனைத்து வகையிலும் ஸ்ரீதேவிக்கு ஆறுதலாக இருந்தார் போனி.

தாயை இழந்த ஸ்ரீதேவிக்கு, போனியின் ஆறுதல் அவர் மீது காதல் வர காரணமானது. இதற்கிடையில் இவர்கள் இருவரது விவகாரம் தெரிந்து போனியின் முதல் மனைவி விவாகரத்து செய்துகொண்டு போனியின் வாழ்க்கை இருந்து விலகி போனார்.

இதற்கிடையில், போனியின் வீட்டில் தங்கியிருந்த ஸ்ரீதேவி, திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம் ஆனார். இதனால் இவர்களது திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்தது.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும் அவர் மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது என ஒரு பேட்டியின் போது தெரிவித்தார் போனி.

தற்போது, ஸ்ரீதேவி இறந்துவிட்டதால் தனது இருமகள்களான ஜான்வி,குஷியையும் நன்றாக வளர்ப்பதே இனி எனது கடமைஎன கூறியுள்ளார் போனி.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்