என்ன பொண்ணுடா இந்த ஜோதிகா: வியந்துபோன சூர்யாவின் சுவாரசிய காதல்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
540Shares
540Shares
lankasrimarket.com

தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாய் வலம் வரும் நடிகர் சூர்யாவும், ஜோதிகாவின் திருமண நாள் இன்று.

2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி இவர்களுக்கு திருமணம் நடந்தது.

7 படங்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்ததன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது.

ஜோதிகா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர், இவர்களின் திருமணத்திற்கு ஆரம்பத்தில் பெற்றோர்களிடம் இருந்து சம்மதம் கிடைக்கவில்லை.

காதலிக்க தொடங்கியதில் இருந்து சில ஆண்டுகள் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

படப்பிடிப்புகளில் மிகவும் அமைதியாக இருக்கும் சூர்யா, பெண்கள் மீது காட்டும் மரியாதையே அவரை பிடித்துப்போனதற்கு காரணம் என பேட்டிகளின் போது ஜோதிகா கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில், சூர்யாவின் நடிப்பு விமர்சனத்திற்கு ஆளானபோது, கண்களாலேயே நடிப்பால் அசரடித்தார் ஜோதிகா. இவரின் நடிப்பை பார்த்து, என்ன பொண்ணுடா இது என்று வியந்திருக்கிறேன் என கூறுகிறார் சூர்யா.

நான் பெரிய ஸ்டாராக வருவேன் என ஜோதிகா எப்போதும் என்னிடம் கூறுவார். நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டோம்.

சூர்யா என் நண்பராக இருந்த காரணத்தால் தான், நல்ல காதலராகவும், கணவராகவும் இருக்க முடிகிறது என்று ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார் ஜோதிகா.

ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்த இவர்கள் அதன் பின்னர் காதலர்களாக மாறி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

திருமணம் செய்துகொண்ட நாளன்று, இருவரும் ஒருவருக்கொருவர் வார்த்தைகயால் காயப்படுத்திக்கொள்ளக்கூடாது என்று பேசிக்கொண்டோம். ஒரு முறை எங்கள் இருவருக்குள்ளும் சிறு சண்டை வந்து 15 நாட்கள் பேசமா இருந்தோம்.

அந்த நாட்களில் ஒருவருக்கொருவர் மிகவும் மிஸ் செய்தோம். அந்த பிரிவை தாங்கிகொள்ள முடியாமல் அதன்பிறகு பேசிக்கொண்டோம். அதன்பிறகு இன்றுவரை நாங்கள் சண்டைபோட்டுக்கொள்ளவில்லை.

தனது காதல் பற்றி நடிகர் சூர்யா, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார். தங்கை பிருந்தாவின் திருமணம் நடைபெற்றபோது ஜெயலலிதா அங்கு சென்றிருக்கிறார். அப்போதுதான் இதுகுறித்து சூர்யா, ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார்.

பின்னர், இதுகுறித்து ஜெயலலிதா, சிவக்குமாரிடம் தெரியப்படுத்தியதையடுத்து இவர்கள் திருமணம் நடந்துள்ளது. இந்த தகவலை ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், சூர்யா தெரியப்படுத்தினார்.

பெற்றோரின் சம்மதத்துடன் தான் நமது திருமணம் நடக்கவேண்டும் என்பதில் சூர்யா உறுதியாக இருந்ததால் 2006 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

சூர்யா போன்று ஒரு ஆண்மகனை நான் பார்த்தது கிடையாது, அதனால் தான் அவரை நான் திருமணம் செய்துகொண்டேன், எனது கணவனின் குணத்தில் பாதியாவது எனது மகன் தேவ்க்கு இருக்க வேண்டும்.

எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட அருகில் இருந்து அன்போடு பார்த்துக்கொள்வார், அந்த அளவுக்கு அக்கறையும், எனது உணர்வுகளுக்கு மதிப்பும் அளிக்கக்கூடியவர் என மகிழ்கிறார் ஜோதிகா.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்