பிரபல வீராங்கனை சாய்னா நேவாலுக்கு டிசம்பரில் டும் டும் டும்

Report Print Jayapradha in உறவுமுறை

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், சக வீரராக பருபல்லி காஷ்யாப்புடன் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக உறுதிபடுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக சாய்னா - காஷ்யப் திருமணம் குறித்து ஊடகங்களில் தகவல் கசிந்து வந்தது. இது குறித்து இருவரும் அதிகாரபூர்வ் தகவல் தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் சாய்னா, முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

காஷ்யபும் சாய்னாவும், முன்னாள் பாட்மின்டன் வீரரான கோபிசந்த் அகாடமியில் தான், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

இது குறித்து ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்த சாய்னா, ‘நாம் வாழும் இந்த உலகத்தில், ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக பழுகுவது என்பது மிகவும் சவாலனதாக மாறியுள்ளது. ஆனால், நானும் காஷ்யபும் மிக இயல்பாக பழகினோம். நெருக்கமானோம்.

மேலும் இருவர் இடையேயான நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த சாய்னா - காஷ்யப்பின் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதன்படி, சாய்னா - காஷ்யப் திருமணம் ஐதராபாத்தில் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், முக்கியமான நபர்கள் சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உறவினர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 21ஆம் தேதி மிகப்பெரிய அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்