துரோகம் செய்த கணவனை மன்னித்து ஏற்றுக் கொண்ட மனைவிகள்

Report Print Kabilan in உறவுமுறை

துரோகம் செய்த கணவனை மன்னித்து ஏற்றுக் கொண்ட பிரபலங்களின் மனைவியர் குறித்து இங்கு காண்போம்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்-ஜெயா ஜோடி பாலிவுட்டின் ரொமாண்டிக் தம்பதி ஆவர். ஆனால், அமிதாப் நடிகை ரேகாவுடன் உறவில் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் இருவரும் இதனை ஒப்புக்கொள்ளவில்லை.

இதுதொடர்பாக ஜெயாபச்சன் கூறும்போது, ‘நான் என் கணவரை நம்புகிறேன். நான் அவர் மீது முழுமையான தைரியமும், அன்பும் கொண்டிருக்கிறேன். எனக்கு அவர் பணிபுரியும் துறை எத்தகையது என தெரியும்.

நான் அவரது செயலில் ஒருபோதும் அச்சத்தையோ, நம்பிக்கையின்மையோ உணர்ந்தது இல்லை’ எனக் கூறி அமிதாப்பை ஏற்றுக்கொண்டார்.

கோவிந்தா

நடிகர் கோவிந்தா மற்றும் ராணி முகர்ஜி இருவரும் ‘ஹாத் கர் தி ஆப்னே’ என்ற படத்தில் நடித்த சமயத்தில் காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்டது. மேலும், செய்தி நிபுணர் ஒருவர் ராணி முகர்ஜியின் இல்லத்தில் கோவிந்தாவை இரவு உடையில் கண்டதாக தெரிவித்தார். ஆனால், ராணியின் பெற்றோர் அதனை முழுமையாக மறுத்தனர்.

ஷாருக்கான்

’டான்’ படத்தில் நடித்தபோது ஷாருக்கான் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது. அத்துடன் ஷாருக்கானின் அலுவலகத்தில் இருந்து நள்ளிரவு சமயத்தில் பிரியங்கா சோப்ரா வெளியேறியதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், ஷாருக்கானை அவரது மனைவி எந்தவித சந்தேகமும் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டார்.

அஜய் தேவ்கான்

விரைவில் பிரிந்துவிடுவார்கள் என்று பாலிவுட்டில் கூறப்பட்ட நட்சத்திர ஜோடி அஜய் தேவ்கான்-கஜோல். ஆனால், இன்றுவரை அனைவரும் வியப்படையும் வகையில் இந்த ஜோடி சிறந்த தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது வாழ்விலும் ஒருமுறை புயல் வீசியுள்ளது. ‘Once Upon A Time in Mumbai' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கங்கனா-அஜய் தேவ்கான் இடையே கிசுகிசுக்கள் பரவின. ஆனால், கஜோல் தனது கணவர் மீது வைத்திருந்த நம்பிக்கையால், இவர்களது காதல் வாழ்க்கை சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார், நடிகை ட்விங்கிள் கண்ணாவுடன் காதலில் இருந்த சமயத்திலேயே, ஷில்பா ஷெட்டியுடனும் காதலில் இருந்தார் என்று தகவல்கள் பரவின. அதனால் அக்‌ஷய் தன்னை ஏமாற்றுகிறார் என அறிந்தே ஷில்பா அவரை பிரிந்தார் என்றும் கூறப்பட்டது.

இவ்வளவு சம்பவங்களுக்கு பிறகும், அக்‌ஷய் மீதான காதலால் ட்விங்கிள் கண்ணா அவரை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

ராஜ்கபூர்

நடிகர் ராஜ்கபூர், கிருஷ்ணா மல்ஹோத்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். எனினும், இவர் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் நடிகை நர்கிஸுடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பலருடனும் நெருக்கமான உறவு வைத்திருந்தார் என்றும் ராஜ்கபூர் மீதான புரளிகள் கிளம்பின. ஆனால், இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் கிருஷ்ணா மல்ஹோத்ரா அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

ஆதித்யா பஞ்சோலி

ஆதித்யா பஞ்சோலி பல பெண்களுடன் உறவில் இருந்து, தனது மனைவியை ஏமாற்றியதாக அவரே கூறியுள்ளார். அதற்காக லட்சக்கணக்கான முறை மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருமுறை நடிகை கங்கனா, இவர் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின. எனினும், தனது கணவரை மன்னித்து ஸரீனா ஏற்றுக் கொண்டார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers