வருங்கால நாத்தனாரை உப்புமூட்டை தூக்கிச் செல்லும் பிரியங்கா சோப்ரா! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in உறவுமுறை

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தனது வருங்கால நாத்தனாரை உப்பு மூட்டை தூக்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வருகிற டிசம்பர் மாதம் 1ஆம் திகதி, ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரியங்கா சோப்ராவின் பேச்சுலர் பார்ட்டி ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்துள்ளது.

அப்போது பிரியங்கா சோப்ரா தனது வருங்கால நாத்தனார், அதாவது ஜோனஸின் சகோதரி சோஃபி டர்னரை உப்பு மூட்டை தூக்கிச் சென்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பிரியங்கா சோப்ரா தனது நாத்தனார் சோஃபியுடன் உணவகங்களுக்கு செல்லுதல், ஷாப்பிங் செய்தல் என ஒன்றாகவே மகிழ்ச்சியுடன் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்