அவளுடன் வாழ்ந்த அந்த 16 வருடங்கள்: முதல் மனைவி குறித்து மனம் திறந்த பிரபல நடிகர்

Report Print Arbin Arbin in உறவுமுறை

நீண்ட 16 ஆண்டுகள் அவளுடன் வாழ்ந்த தான் ஒரு அதிர்ஷ்டசாலி என தமது முதல் மனைவி குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார் நடிகர் அமீர் கான்.

இந்தி திரையுலகில் நடிப்புக்கு மட்டுமல்ல வசூல் வேட்டைக்கும் எப்போதுமே முன்வரிசையில் இருப்பவர் நடிகர் அமீர் கான்.

திருமண வாழ்க்கை தொடர்பாகவும், விவாகரத்து குறித்தும் அமீர் கான் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

தமது இரண்டாவது திருமணம் மிகவும் கவலை நிறைந்த முடிவாக இருந்தது என மனம் திறந்த அமீர் கான்,

ரீனா தத்தாவுடனான 16 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது தொடர்பாக உருக்கமாக பேசியுள்ளார்.

ரீனா தத்தாவை பிரிந்து செல்ல மேற்கொண்ட முடிவு, தமக்கு மட்டுமல்ல, ரீனாவுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் மிகுந்த கவலையை அளித்தது என்றார் அமீர்.

ஆனால் இருவரும் தங்களால் இயன்ற அளவுக்கு அந்த முடிவை நடைமுறைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

ரீனாவுடன் விவாகரத்து பெற்றுக் கொண்டதால் அவர் மீது தனக்கிருக்கும் மதிப்போ அல்லது அவருடன் தமக்கிருக்கும் அன்பு குறைந்துவிட்டதாகவோ இல்லை என்றார்.

ரீனா தத்தா மிகவும் வியக்க வைக்கும் ஆளுமைக்கு உரியவர் என தெரிவிக்கும் அமீர் கான், 16 ஆண்டுகள் அவருடன் வாழ்க்கை நடத்தியது தமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றார்.

அவருடனான அந்த வாழ்க்கை தான் என்ற ஆளுமையை மேலும் மெருகூட்ட தமக்கு உதவியது.

இளம் வயதிலேயே நாங்கள் திருமணம் செய்து கொண்டாலும், நாங்கள் இருவரும் எங்களது திருமண வாழ்க்கைக்கு அதற்கான முக்கியத்துவம் அளித்துள்ளோம் என்றார்.

1986 ஆம் ஆண்டு அமீர் கான் மற்றும் ரீனா தத்தா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 2002 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இந்த திருமணத்தில் ஜுனைத் என்ற மகனும் இறா என்ற மகளும் உள்ளனர். 2005 ஆம் ஆண்டு அமீர் கான் கிரண் ராவு என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers