10 வயது குறைவானவரை திருமணம் செய்த பிரியங்கா சோப்ரா! குடும்பத்துடன் கலந்துகொண்டு வாழ்த்திய முகேஷ் அம்பானி

Report Print Kabilan in உறவுமுறை

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம், ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறித்துவ முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.

ஹிந்தியில் இருந்து ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்து வந்தார். இவர் பிரியங்காவை விட 10 வயது இளையவர் ஆவார்.

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஜோடிக்கு திருமணம் நிச்சயயிக்கப்பட்டது.

நிக் ஜோனஸ் கிறித்துவ மதத்தைப் பின்பற்றுபவர் என்பதால், ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் முதலில் கிறித்துவ முறைப்படியும், அதன் பின்னர் இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்றைய தினம் கத்தோலிக்க கிறித்துவ முறைப்படி இவர்களின் திருமணம் நடந்தது. பாதிரியார் முன்னிலையில் பிரியங்கா-ஜோனஸ் இருவரும் மண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மிகவும் ஆடம்பரமாக நடந்த இந்த திருமண விழாவில், மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

திருமணத்தில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கும் வகையில், விருந்தினர்கள் செல்போன் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஜோடி இன்று இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்