ரஜினியின் மகளுக்கு அவரது இரண்டாவது காதலருடனான சந்திப்பு மலர்ந்தது எப்படி?

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா - பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளர் விசாகன் இருவருக்குமான திருமணம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற உள்ளது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே விவாகரத்தானவர்கள். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சந்தித்துக்கொண்ட இவர்கள் நண்பர்களாகி, பின்னர் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டனர்.

`கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் விசாகனும், செளந்தர்யாவும் முதல் முறையாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துவிட்டது. நாம் இருவரும் ஒரே அலைவரிசை எண்ணம் கொண்டவர்கள் என்பதால், நாம் ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என இருவரும் பேசிக்கொண்டனர்.

தங்களின் விருப்பத்தை இரு வீட்டார்களிடமும் தெரியப்படுத்தினர். பிறகு, இரு குடும்பத்தாரும் சந்தித்துப் பேசி இவர்களின் திருமணத்தை உறுதி செய்தனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்