திருவிழா போன்று நடந்த திருமணம்: பெண் பார்க்க, காவி வேஷ்டியோடு சென்ற விஜயகாந்த்!

Report Print Arbin Arbin in உறவுமுறை

விஜயகாந்தின் திருமண நாளான இன்று அவரது மனைவி தமது திருமணம் தொடர்பிலும் விஜயகாந்த் தொடர்பிலும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

குடும்பத்தில் சின்ன விடயமாக இருந்தாலும் அதை பெரிய கொண்டாட்டமாக மாற்றிவிடும் விஜயகாந்த், எப்போதும் எல்லோருக்கும் ஏதாவது கொடுத்து மகிழும் குணம் படைத்தவர்.

ஆனால் தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் மிக எளிமையாகக் கொண்டாடியிருக்கிறார் தனது திருமணநாளை.

கல்லூரி முடித்த நிலையில் இருந்த பிரேமலதாவை, விஜயகாந்த் குடும்பத்தார் சென்று பெண் பார்த்துள்ளனர்.

அனைவருக்கும் பிடித்துப்போன நிலையில், விஜயகாந்தை பெண் பார்க்க அனுப்பி வைத்துள்ளனர்.

”அவர் நடிச்ச பல படங்களைப் பாத்திருக்கேன். எனக்கும் எங்க வீட்டுக்கும் அவரைப் புடிச்சுப் போச்சு. அவங்க வீட்லயும் என்னை பிடிச்சிருச்சு. இப்ப, அவர் பாத்துட்டு என்ன சொல்லப்போறாரோனு ஒரு டென்ஷன் எல்லாருக்குமே!” என பதிவு செய்திருந்தார் பிரேமலதா.

பெண் பார்க்க சென்ற விஜயகாந்த், அப்போது சபரிமலைக்கு மாலை போட்டிருந்ததால் காவி வேஷ்டியுடன் சென்றுள்ளார்.

”அவரோட எளிமை, பந்தாவோ அலட்டலோ இல்லாத பேச்சு, பெரியவங்ககிட்ட காட்டின மரியாதை, வயசு வித்தியாசம் இல்லாம எல்லார்கிட்டயும் நடந்துக்கிட்ட பணிவு. இதெல்லாமே எல்லாருக்குமே அவரைப் பிடிச்சுப்போச்சு என கூறியுள்ள பிரேமலதா,

ஜனவரி 31 ஆம் திகதி கல்யாணம் ஆச்சு. ஒரு திருவிழா மாதிரி நடந்துச்சு. அதை எத்தனை வருஷமானாலும் மறக்கவே முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...