ஆர்யாவை நேரில் பார்த்தால் அடிப்பேன்: எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் குஹாஷினி

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

நடிகர் ஆர்யா - சாயிஷாவின் திருமணம் குறித்து எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியளாரான குஹாஷினி பகிர்ந்துள்ளார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் தன்னை மணமுடிக்க விரும்பியவர்களில் 16 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் பழகினார் நடிகர் ஆர்யா. அந்தப் பழகுதலுக்குப் பிறகு, பதினோறு பேர் எலிமினேட் ஆக, மீதி ஐந்து பேரின் வீடுகளுக்கு சென்றார்.

பின்னர், இருவர் எலிமினேட் ஆக, கடைசியில் அகதா, சீதாலக்ஷ்மி, சுசானா ஆகிய மூன்று பேர் இறுதிச் சுற்றுக்கு வந்தனர்.

ஆனால், இறுதியில் யாரையும் மணப்பெண்ணாக தெரிவுசெய்யவில்லை ஆர்யா.

இந்த நிகழ்ச்சியில் மக்களின் கவனம் ஈர்த்தவர் அபர்னதி. அவரின் வெளிப்படையான பேச்சு அனைவரும் பிடித்துப்போனது, மேலும் அவரும் உண்மையாக ஆர்யாவை காதலிக்க தொடங்கினார்.

தற்போது, ஆர்யா - சாயிஷாவின் திருமணம் மார்ச் மாதம் நடக்கவிருப்பதை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன், இதிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன் என பேட்டி அளித்தார் அபர்னதி.

இந்நிலையில் மற்றொரு போட்டியாளரான குஹாஷினி அளித்துள்ள பேட்டியில், ஆர்யா தற்போது தனது மதத்துடன் தொடர்புடைய பெண்ணை தெரிவு செய்துருக்கிறார். அப்படியிருக்கையில், பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மதங்களை கொண்ட பெண்களை உள்ளடக்கிய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் எதற்காக கலந்துகொண்டார்.

இந்த செய்தி எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நேரில் பார்த்தால் ஆர்யாவை கண்டிப்பாக அடிப்பேன். எனக்கு இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவுடன் பழகுவதற்கு அதிகமாக விருப்பமில்லை.

அவர் திருமணத்திற்கு அழைத்தால் கூட நான் செல்லமாட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்