திருமணமாகி சில மாதங்களிலேயே உறவை முறித்துக்கொண்ட 5 உலக பிரபலங்கள்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகர், நடிகைகள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை மீது ஊடகங்களின் வெளிச்சம் பட்டுவிடக்கூடாது என்று மிக கவனமாக இருந்தாலும் அவர்களின் திருமண உறவு ஊடகங்களில் தலைப்பு செய்தியாக விமர்சிக்கப்படுவது வழக்கமான ஒன்று.

மிக கோலாகலமாக நடைபெறும் இவர்களது திருமணம் ஊடகங்களில் விமர்சிக்கப்படுவதை விட , திருமண உறவு பிளவுபடும்போதுதான் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்கிறது.

அப்படி, திருமணம் செய்து சில மாதங்களிலேயே உறவை முறித்துக்கொண்ட 5 உலக பிரபலங்கள் இதோ,

Kim Kardashian மற்றும் Kris Humphries

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி சுமார் 18 மில்லியன் டொலர் செலவில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணமாகி இவர்கள் இருவருக்கும் ஒத்துப்போகாத காரணத்தால் 72 நாட்களிலேயே இவர்கள் விவாகரத்து கோரியதையடுத்து தற்போது இருவரும் பிரிந்துவிட்டனர்.

Pulkit Samrat மற்றும் Shweta Rohira

Pulkit தனது நீண்ட நாள் காதலியான Shweta - வை பெற்றோர் சம்மதத்துடன் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால், Pulkit - க்கு நடிகை யாமினி கவுதம் தொடர்பு இருப்பதாக கூறி ஊடகங்களில் தொடர் பேட்டி கொடுத்து வந்த Shweta, திருமணமாகி ஒரு மாதத்தில் விவாகரத்து கோரினார்.

Katy Perry மற்றும் Russel Brand

2010 ஆம் ஆண்டு ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்ட இவர்கள் சில மாதம் டேட்டிங்கில் இருந்தனர். பின்னர் அதே ஆண்டு திருமண செய்துகொண்டபின்னர் , உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 14 மாதங்களில் பிரிந்தனர்.

Karan Singh Gill மற்றும் Mallika Sherawat

பாலிவுட்டின் பிரபல நடிகையான மல்லிகா ஷெராவத், கேப்டன் கரன் சிங்கை காதல் திருமணம் செய்துகொண்டார். தனது நடிப்பில் கவனம் செலுத்துவதால் தனது கணவருடனான திருமண வாழ்க்கையை 12 மாதத்தில் முறித்துக்கொண்டார் மல்லிகா.

Britney Spears மற்றும் Jason Alexander

2004 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் Britney Spears தனது பள்ளித்தோழன் Jason Alexander - ஐ திருமணம் செய்துகொண்டார். லாஸ் வேகாஸில் நடைபெற்ற இவர்களது திருமணம் தலைப்பு செய்தியில் இடம்பெற்றது.

ஆனால், திருமணம் செய்த 55 மணிநேரத்தில் இவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்