மகள் வயதில் உள்ள அழகான பெண்களை மணந்த கோடீஸ்வரர்களை தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in உறவுமுறை

உலகளவில் பல கோடீஸ்வரர்கள் தங்களை விட அதிகளவு வயது குறைவான அழகான பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பெர்னி எக்லிஸ்டோன் (81)

பிரித்தானியாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான பெர்னி Formula One Group-ன் தலைமை நிர்வாக பொறுப்பில் இருந்தவர். 2009-ல் முதல் மனைவியை விவாகரத்து செய்த பெர்னி தன்னை விட 35 வயது குறைவான அழகான பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஜோ ஹார்டி (82)

கோடீஸ்வரர் ஜோ ஹார்டி 23 வயதான கிரிஸ்டன் கார்ஜி என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் 2007-ல் விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் 22 வயதான டேனிலாவை அவர் மறுமணம் செய்து கொண்டார்.

டேவிட் சீகல் (77)

கட்டிட துறையில் ஜாம்பவானாக திகழும் டேவிட் பல கோடிகளின் அதிபதியாவார்.

இவர் தன்னை விட 31 வயது குறைவான ஜாக்குலின் (46) என்பாரை திருமணம் செய்து கொண்டார்.

ரூபர்ட் முர்டோச் (80)

அமெரிக்காவை சேர்ந்த பெரும் புள்ளியான ரூபர்டுக்கு சீனாவை சேர்ந்த 42 வயதான வெண்டி டிங் என்ற பெண் மீது காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவரையே ரூபர்ட் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.

அர்னவுட் லகர்டிர் (50)

பிரான்ஸை சேர்ந்த பெரும் பணக்காரரான அர்னவுட் லகர்டிர், பிரபல மொடலான ஜேட் பாரஸ்ட் (20) என்ற அழகான பெண்ணை மணந்தார்.

ஜிம் கிளார்க் (68)

அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர் ஜிம் கிளார்க், இவர் அவுஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்டி ஹின்சி (32) என்பவரை கடந்த 2009ல் திருமணம் செய்து கொண்டார். தம்பதிகள் தற்போது வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...