திருநங்கையை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர்... வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Santhan in உறவுமுறை

தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், மும்பையில் வேலை செய்து வரும் லட்சுமணன் என்பவரை பேஸ்புக் மூலம் நட்பாகி அவரை காதலித்து வந்த நிலையில், இன்று அவரை திருமணம் செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம், திருவந்திபுரம் சாலைக்கரையைச் சேர்ந்த சேகர்-அமுதா. இந்த தம்பதிக்கு அமிர்தா என்ற மகள் உள்ளார். திருநங்கையான அமிர்தா பி.எஸ்ஸி வரை படித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்தவர் லட்சுமண். இவர் மும்பையில் சினிமா ஷூட்டிங்களுக்கு செட் அமைக்கும் பணியில் தொழிலாளராகப் பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில் பேஸ்புக்மூலம் அமிர்தாவிற்கு, லட்சுமணன் அறிமுகமாகியுள்ளார். அதன் பின் இருவரும் பேஸ்புக்கில் தங்கள் நட்பை வளர்த்து வந்துள்ளனர்.

இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாற, இது குறித்து பெற்றோரிடம் இருவரும் தெரிவித்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, இன்று காலை இவர்கள் இருவருக்கும் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இது குறித்து அமிர்தா கூறுகையில், நான் பி.எஸ்ஸி வரை படித்துள்ளேன். கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்குப் படித்து வருகிறேன். பொலிஸ் வேலைக்கும் முயற்சி செய்துவருகிறேன்.

நான் கடந்த இரண்டு வருடமாக மும்பையில் இருந்தேன். அப்போது தான் பேஸ்புக் மூலம் எனக்கும், மும்பையைச் சேர்ந்த லட்சுமணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாகப் பழகினோம். எங்கள் நட்பு காதலாக மாறியது.

ஒரு வருடமாக காதலித்துவந்தோம். இது குறித்து என் பெற்றோருக்குத் தெரிவித்தேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். எங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்து திருவந்திபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி கோயிலில் நடத்த முடிவுசெய்தோம்.

ஆனால், அதற்கு எதிர்ப்பு இருந்தது. கோயில் அலுவலர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கொடுத்து அனுமதி வாங்கி இன்று கோயிலில் திருமணம் செய்துகொண்டோம் என்று கூறியுள்ளார்.

லட்சுமணன் கூறுகையில், எங்களின் காதலைப் பற்றி கூறுகையில், முதலில் பெற்றோர் எதிர்த்தனர். அதன் பின் அவர்களை சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொண்டோம்.

இனி நான் மும்பை செல்லப் போவதில்லை. திருவந்திபுரத்தில் அமிர்தாவுடன் வசிக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்