ஆர்த்தி வசதியான வீட்டு பெண்! அவளால் அழகான என் வாழ்க்கை... காதல் மனைவி குறித்து உருகிய சிவகார்த்திகேயன்

Report Print Raju Raju in உறவுமுறை

தமிழ்த்திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தனது தாய் மாமன் மகள் ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மற்ற தம்பதிகளுக்கு முன்னுதாரணமாக இத்தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள்

மனைவி குறித்து சிவகார்த்திகேயேன் கூறுகிறார்,

ஒருமனமான இருமனம்

என் தாய்மாமா மகள் தான் என்றாலும் ஆர்த்தியுடன் நான் அவ்வளவாக பேசியதில்லை.

நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்துவிட்டு, மாமா பெண்ணைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறேன் என்று என் அம்மா சொன்னார்.

ஆர்த்தி வசதியான வீட்டு பெண், ஆனால் திருமணமாகும் போது எனக்கு பெரிய வசதியில்லை.

ஆனால் வசதியை அவர் எப்போதும் வெளிகாட்ட மாட்டார்.

நெகிழ்ந்த தருணம்

என் மகள் ஆராதனா பிறந்தநாள் எங்களால் மறக்க முடியாது. பெண் குழந்தையாக இருந்தால் கூடுதல் சந்தோஷம் என நான் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், நான் நினைத்தபடியே ஆராதனா கிடைத்தாள்.

எங்களது திருமண வாழ்க்கையை ஆராதனாவுக்கு முன், பின் எனப் பிரிந்துக்கொள்ளலாம். முன்பு நான் மட்டுமே இருந்தேன். இப்போது ஆர்த்தி குழந்தை வளர்ப்பில் பயங்கர பிஸி.

சமையல் திறமை

சமையல் செய்வதில் திறமைசாலியான ஆர்த்தி திருமணமான புதிதில் என் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து ஒரே நேரத்தில் 12 பேருக்குச் சமைத்துக் கொடுத்து அசத்தினார்.

மட்டன், சிக்கன் என ஆர்த்தி எதைச் சமைத்தாலும் அது பிரமாதமாக இருக்கும்.

சர்ப்பரைஸ் செய்வதை நிறுத்தினேன்

திருமணத்துக்குப் பிறகு ஆர்த்தியின் முதல் பிறந்த நாளுக்கு என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டேன். எல்லாம் சினிமா பாணியில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தத்தான்.

இதையடுத்து வீட்டின் சுவர் ஏறி குதித்து, பால்கனி கதவு வழியாக வீட்டுக்குள் கேக் எடுத்துச் சென்றேன்.

என்னைப் பார்த்ததும் பயந்து அழுதுவிட்டார். அவர் அழ ஆரம்பித்தவுடன் எனக்குப் பயமாகிவிட்டது. அதிலிருந்து அவரை சர்ப்ரைஸ் செய்வதை நிறுத்திவிட்டேன்.

வியத்தகு வேலை

எனது வருமானவரி தொடர்பான வேலைகளை ஆர்த்தி தான் கவனித்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு நான் அனைத்து வரியையும் சரியாகக் கட்டியுள்ளேன் என்று வருமான வரித் துறையில் ‘தங்கச் சான்றிதழ்’ கொடுத்தார்கள். நான் மட்டுமே பார்த்திருந்தால் கூட, சரியாகப் பார்த்துக் கட்டியிருப்பேனா என்று தெரியவில்லை.

வீட்டில் குழந்தை வளர்ப்புக்கு இடையே வருமான வரிகளை அவர் சரிபார்ப்பது எளிதான விடயமல்ல!

மனைவியே மந்திரி

எங்கள் வீட்டு விடயங்கள் எல்லாவற்றையும் கவனித்து கொள்வது ஆர்த்தி தான், வீட்டில் என்ன நடக்கிறது என்ற டென்ஷன், பிரஷர் எதுவுமே இல்லாமல் படப்பிடிப்புக்கு நான் போய்வர ஆர்த்திதான் காரணம்.

முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அவர் என்னிடம் கேட்டுக்கொள்வார்.

என்னை இந்த ஊருக்குக் கூட்டிட்டுப் போ, இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று இதுவரை ஆர்த்தி சொன்னதில்லை.

என் நிலை அறிந்து அதற்கேற்றார் போல செயல்படுவார் ஆர்த்தி என கூறியுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...