தன்னுடன் ஒன்றாக நடித்தவர்களையே காதல் திருமணம் செய்த தமிழ் பிரபலங்கள்!

Report Print Kabilan in உறவுமுறை

தமிழ் திரையுலகில் தங்களுடன் ஒன்றாக நடித்தவர்களையே காதல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் குறித்து இங்கு காண்போம்.

எம்.ஜி.ஆர்-ஜானகி

கடந்த 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ஜானகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மருதநாட்டு இளவரசி, நாம், மோகினி போன்ற பல படங்களில் இவர்கள் ஒன்றாக நடித்திருந்தனர்.

பாக்யராஜ்-பூர்ணிமா

திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பாக்யராஜும், பல தென்னிந்திய மொழிகளில் நடித்த பூர்ணிமாவும் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அஜித்குமார்-ஷாலினி

நடிகர் அஜித்குமாரும், நடிகை ஷாலினியும் ‘அமர்க்களம்’ என்ற ஒரே படத்தில் தான் ஒன்றாக இணைந்து நடித்தனர். அப்போது தான் இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, படம் வெளியான அடுத்த ஆண்டிலேயே(2000) இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சூர்யா-ஜோதிகா

‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் முதன் முறையாக ஒன்றாக நடித்த சூர்யா-ஜோதிகா ஜோடி, அதன் பின்னர் காக்க காக்க, மாயாவி, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் இணைந்து நடித்தது.

ஆனால், முதல் படத்திலேயே இவர்களின் காதல் மலர்ந்துவிட்டது. பின்னர் 2006ஆம் ஆண்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

பிரசன்னா-சினேகா

நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கோவா, அச்சமுண்டு அச்சமுண்டு போன்ற படங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சரத்குமார்-ராதிகா

சரத்குமார்-ராதிகா இருவரும் 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நம்ம அண்ணாச்சி, சூர்யவம்சம் போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

பொன்வண்ணன்-சரண்யா

இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணன், நடிகை சரண்யாவை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கருத்தம்மா, பசும்பொன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

சுந்தர்.சி-குஷ்பு

இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான சுந்தர்.சி கடந்த 1997ஆம் ஆண்டு நடிகை குஷ்புவை திருமணம் செய்துகொண்டார். சுந்தர்.சி இயக்கிய முதல் படமான ‘முறை மாமன்’ திரைப்படத்தில் குஷ்பு கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...