எனக்காக அடி வாங்கினார்!...நளினி- ராமராஜனின் சுவாரசிய காதல் கதை

Report Print Fathima Fathima in உறவுமுறை

1980களின் சினிமாவை கலக்கிய நட்சத்திர நடிகைகளில் நளினியும் ஒருவர், பள்ளிப் பருவத்திலேயே சினிமாவுக்கு அறிமுகமாகி வருடத்திற்கு 24 படங்கள் வரை நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்த நளினி, 1987ம் ஆண்டு நடிகர் ராமராஜனை கரம்பிடித்தார்.

இவர்களுக்கு அருண், அருணா என இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், கருத்து வேறுபாடால் 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியொன்றில், காதல் டூ கல்யாணம் பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் நடிகையாக இருந்த போது ராமராஜன் அவர்கள் அசிஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றினார்.

என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும் போல, ஒருநாள் அடுத்த சீனுக்காக காத்திருந்த நேரத்தில், நீங்க இந்த டிரெஸ்ல அழகா இருக்கீங்க, நாளைக்கு இதையே போட்டுட்டு வாங்க” என கூறினார்.

நானும் ஏதேச்சையாக அதை மறுநாள் போட்டுவர, நாம் சொல்லித்தான் இதை செய்தார் என அவருக்கு என்மீது காதல் துளிர்விட்டுள்ளது.

அடுத்ததாக மனைவி சொல்லே மந்திரம் படஷீட்டிங்கின் போது, பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று வந்து குங்குமத்தை எனக்கு கொடுத்தார், என் கையில் மருதாணி இருந்ததால் நீங்களே வைத்துவிடுங்கள் என கூறினேன்.

இதனால் மேலும் காதல் அதிகரித்தது, ஏதேச்சையாக நடந்த சம்பவங்கள் அவர் மனதில் காதலை வளர்த்துவிட்டன.

தொடர்ந்து என்னுடைய வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளனர், இதைக்கேட்ட என் குடும்பத்தார் அவரை அடித்து உதைத்து அனுப்பியுள்ளனர்.

இச்சம்பவத்தை என்னிடம் வந்து கூறியதும், நமக்காக ஒருத்தர் அடி வாங்கி இருக்காரே, நாம் திருமணம் செய்தால் என்ன? என்று தோன்றியது.

அந்தநேரத்தில் என் நண்பர்களுக்கு தொடர்ந்து திருமணம் நடந்ததால் எனக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது.

ராமராஜன் வந்து கேட்டதும் நானும் ஓகே சொல்லிவிட்டேன், திருமணத்துக்கு பின்னர் தான் அவரை காதலித்தேன் என கூறியுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்