உங்கள் காதல் தோல்விக்கு இதில் ஒன்றுதான் காரணமாக இருக்கும்!

Report Print Abisha in உறவுமுறை

90களில் காதலித்தவர்கள் தங்களின் உணர்வுகளை வேறுவிதமாகவே வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் தங்களின் காதல் தோல்வியை பெரிய விடயமாகவும் எடுத்து கொள்கின்றனர். ஆனால், தற்போது அப்படி இல்லை ஒன்று போனால், மற்றொன்று உள்ளது என்று தங்களின் உறவுகளை தொலைத்து வாழ்கின்றனர்.

அப்படி இருக்கையில், காதல் தோல்விக்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

எண்ணங்களில் மாற்றம்

முன்பு அனைவரும் கூட்டு குடும்ப சூழலில் வாழ்த்து வந்தோம். ஆனால் இன்று அப்படி இல்லை எண்ணங்களில் அதிக மாற்றம் ஏற்பட்டுள்ளது. நான், எனக்கு, என்னுடையது என்று தனித்து சிந்திக்கிறோம். இது காதலில் மிகவும் கொடியதாக இருக்கும். காரணம் விட்டுக்கொடுக்கும் மனநிலை இல்லாமல் இருக்கும்.

சகிப்புதன்மை

சகிப்பு தன்மை சிறிய பிரச்னைகள் வந்தாலும் அது அடுத்தநாள் சரியாகிவிடும் என்ற எண்ணம் தற்போதைய இளைஞர்களிடம் இல்லை. ஓருநாள் உங்களை சந்திக்க தமதமானால் அதை பொறுத்து கொள்ளும் அளவில் உங்கள் மனநிலை தயாராக இல்லை. இது பலநாள் தொடர தொடர உங்களின் பிரிவில் வந்து சேர்கிறது.

எதிர்பார்ப்புகள்

அதிக எதிர்பார்ப்பு எப்போதும் ஆபத்தாக உள்ளது. அதாவது பெரும்பாலனவர்களுக்கு தங்களுடன் மட்டும் நேரத்தை செலவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், தனக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எதிர்பாப்பு அதிகரிப்பதே காதலர் பிரிய பெரும்பாலும் காரணமாக அமைகிறது.

பலமுறை காதல்

ஒருமுறை காதலில் தோல்வி அடைந்தவர்கள் அடுத்தமுறை நிச்சயம் இந்த பிரச்னை வராமல் பார்த்துக்கொள்ளலாம் என்று நம்புகின்றனர். ஆனால், அதுவே அவர்களுக்கு பிரச்னையாக மாறுகிறது. இதனால் முன்புள்ள காதலை சுட்டிகாட்டி பலர் பிரச்னையில் கொண்டு சென்று பிரிகின்றனர்.

கட்டுப்பாடுகள்

காதலிக்கும்போதே இந்த ஆடை அணியவேண்டும். இவருடன் மட்டுதான் நீ பேச வேண்டும். வெளியில் செல்லக்கட்டுப்பாடு. போன்றவை காதல் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைகிறது. கட்டுப்பாடுகள் விதிக்குமுன் எந்தவகையில் பேசும்போது அவர்கள் இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று முறையான புரிதல் இல்லமல் இருத்தல் காதல் தோல்விக்கான முக்கிய காரணமாகவே அமையும்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers