Work From Home சிரமங்களை சமாளிக்க சில வழிமுறைகள்...

Report Print Gokulan Gokulan in உறவுமுறை

கொரோனா வைரஸ் பாதிப்பினால் பல தனியார் நிறுவனங்களும், பல அலுவலகங்களும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல ஊழியர்கள் வீட்டில் இருந்து அலுவலக வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆபீஸுக்கு போனா எந்த பிரச்சினையும் இல்லை. வேலைகளை விரைவில் முடித்து விடலாம். யாரும் இடைஞ்சல் கொடுக்க மாட்டாங்க. ஆனால் வீட்டில் இருந்தால் அது கொஞ்சம் கடினம். வீட்டில் இருந்து வேலை செய்யும்போது வீட்டில் இருப்பவர்கள் டிவியை பார்ப்பார்கள். சத்தம் அதிகம் வரும். இதனால் வேலை செய்யும்போது இடையூர் ஏற்படும்.

வீட்டில் அலுவலக அவசர வேலை செய்யும் போது குழந்தைகள் ஓடி வந்து அப்பா… அம்மான்னு மடியில் ஏறி உட்கார்ந்து கொள்வார்கள். இதனால் செய்யும் வேலையும் தடை படும்.

சில நேரங்களில் யாராவது வந்து கதவை தட்டுவார்கள். இதனால் வீட்டில் அலுவலக வேலையை செய்வதால் மனஉளைச்சல் கூட சில பேருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முழுத்திறனுடன் வேலையை முழுமையாக முடிக்க முடியாது. இப்படியெல்லாம் சில பேருக்கு நெருக்கடிகள் இருக்கலாம்.

இப்படிப்பட்ட நெருக்கடிகளை சமாளிப்பது எப்படின்னு எண்ணியதுண்டா?

வீட்டில் இருந்து வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்று முதலில் தீர்மானித்து விடுங்கள். எவ்வளவு நேரத்தில் வேலைகளை விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு வேகத்தில் முன்னதாக முடிக்க திட்டமிடுங்கள். எதை முதலில் செய்வது, எதை பிறகு செய்வது என்பதை அறிந்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இரவே யோசித்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அலுவலகத்தில் உள்ள பணியாளர்களிடம் தொடர்பில் இருங்கள். அலுவலகத்தில் எப்படி அவர்களிடம் தொடர்பில் இருப்பீர்களோ அப்படியே தொடர்பில் இருங்கள்.

வீட்டில் உள்ள பொருட்களை சரிசெய்துவிட்டு அலுவலகமாக அறையை மாற்றிக்கொள்ளுங்கள். யாராவது பேச வந்தால் எனக்கு வேலை இருக்கிறது என்பதை கொஞ்சம் கண்டிப்பாக சொல்லிவிடுங்கள். வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிவிடுங்கள்.

அலுவலகத்தில் இடைவெளி எப்படி கொடுப்பார்களோ அதைப்போல் வீட்டிலும் அந்த நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

நண்பர்கள் போன் செய்தார்கள் என்றால் முக்கியமான விஷயமாக இருந்தால் எடுங்கள். அப்படியில்லையென்றால் வேலையை முடித்துவிட்டு நிதானமாக அவர்களிடம் பேசிக்கொள்ளுங்கள்.

போன், லேப்டாப் போன்றவற்றை எப்போதும் சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் எதிர்பாராத சிரமங்கள் ஏற்படுத்தும்.

யாராவது பேசினால் வாட்ச் அப்பில் டைப் செய்து கொண்டிருக்காதீர்கள். ரெக்கார்ட் பேசி அவர்களுக்கு அனுப்பி வையுங்கள். டைப் செய்தால் உங்களுடைய நேரம் செலவாகும்.

அலுவலகத்திற்கு செல்லும் நேரத்தை வீட்டில் இருப்பதால் உங்களுக்கு மிச்சமாகும். அந்த நேரத்தை உங்கள் வீட்டில் இருப்பவர்களிடமோ அல்லது உங்கள் நண்பர்களிடமோ போனில் பேசி செலவழிக்கலாம்.

இப்படி நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் அலுவலகத்தில் சிறந்து விளங்க முடியும். திட்டமிடும் திறன் உங்களுக்கு அதிகரிக்கும். இடைஞ்சல்களை சமாளிக்கும் திறன் உங்களுக்கு வரும். எப்போதும் திட்டமிட்டு செயல்பட பழகிக்கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் எழுந்திருக்கணும். இந்த நேரத்திற்குள் இதை செய்து விட வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டுவிட்டால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் கிட்ட நெருங்காது. குடும்பத்திலும், அலுவலகத்திலும் எந்த பிரச்சினையும் வராது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்