தன்னை விட வயதில் குறைவான ஆண்களை மணந்த பிரபல தமிழ் திரைப்பட நடிகைகளை தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in உறவுமுறை
4101Shares

பிரபல திரைப்பட நடிகைகள் பலர் தங்களை விட வயதில் குறைவான ஆண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக்பச்சன்

பிரபல நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக்பச்சனை கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அபிஷேக்கை விட ஐஸ்வர்யா ராய் 3 வயது பெரியவர் ஆவார்.

பிரசன்னா - சினேகா

இவர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். பிரசன்னாவில் இவ்வளவு பெரிய முன்னேற்றத்திற்கு சினேகாவின் பங்கு கட்டாயம் உள்ளது. இவர்கள் காதல் திருமணம் என்பது அனைவருக்கும் தெரியும். இவர்களை பற்றி கிசு கிசுக்கள் பல வந்ந போதும் இருவரும் மறுக்கவில்லை. பிரசன்னாவை விட சினேகா 1 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாயா சிங் - கிருஷ்ணா

திருடா திருடி திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் சாயா சிங். மன்மத ராசா பாடலில் இவர் ஆடிய குத்தாட்டம் பட்டி தொட்டி எங்கும் பயங்கர பேமஸ் என்றே சொல்லலாம்.

இளைஞர்கள் மனதை ஒரே பாட்டின் மூலம் கொள்ளை கொண்ட இவர் சிறிது காலம் திரை துறை பக்கம் காணாமல் இருந்தார். அதன் பிறகு நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கும் இவரது கணவருக்கும் 2 வயது வித்தியாசம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஸ்வர்யா - தனுஷ்

ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை கடந்த 2004-ல் திருமணம் செய்தார். தனுஷை விட ஐஸ்வர்யா இரண்டு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்தரா

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்தராவை கடந்த 2009-ல் மணந்தார். ராஜ்குந்தராவை விட ஷில்பா ஒரு வயது மூத்தவர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்