பிறக்கப்போகும் புதுவருடம் எவ்வாறு அமைய வேண்டும்? மக்களின் கருத்துக்கள்

Report Print Siddharth in மதம்

புதுவருடப்பிறப்பை வரவேற்க தமிழர்கள் அனைவரும் தயாராகி கொண்டிருக்கும் இன்றைய நாளில் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், பெருமளவான பக்தர்கள் ஆலயங்களில் இடம்பெறும் பூஜைகளில் கலந்து கொண்டு, விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கடந்த வருடமானது தமிழர்கள் வாழ்வில் சுபீட்சமான வருடமாக அமையவில்லை. ஆனால் பிறக்கவிருக்கும் ஹேவிளம்பி வருடமானது தமது எண்ணங்களை நிறைவேற்றி அனைத்து மக்கள் மத்தியிலும் சமாதானத்தை ஏற்படுத்தும் என நம்புவதாக பக்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதுவருடப் பிறப்பை கொண்டாடுவதற்கு தமிழர்கள் அனைவரும் தயாராக இருப்பதாகவும், குறிப்பிட்டுள்ளனர்.

தமது எண்ணங்கள் நிறைவேறி, பிரகாசிக்கக் கூடிய வண்ணமயமான பெருநாளாக பிறக்கப்போகும் புதுவருடம் மலர தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments