ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் தேர் உற்சவம்!

Report Print Kumar in மதம்
176Shares
176Shares
lankasrimarket.com

ஈழத்து திருச்செந்தூர் ஆலயம் என போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் தேர் உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கிழக்கிலங்கையின் பெரும் பிரசித்திபெற்ற முருகன் ஆலயமாகவுள்ள இந்த ஆலயம் மகா துறவி ஓங்காரானந்தா சரஸ்வதி சுவாமிகளினால் ஸ்தாபிக்கப்பட்டதாக ஆலய வரலாறுகள் கூறுகின்றன.

இந்தியாவின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தினை நோக்கியதாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தனை சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பத்து தினங்கள் நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் தினமும், சிறப்பு பூஜைகள் சுவாமி வீதியூலா என்பன நடைபெற்றன.

நேற்று மாலை யாகம் மற்றும் அபிசேக பூஜைகள் நடைபெற்று, மூல மூர்த்தியாகிய முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து முருக பெருமான் வீதி உலா வந்து அருள் பாலித்தார்.

இதேவேளை, இந்த தேர் திருவிழாவிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் பங்கு கொண்டமை சிறப்பம்சமாகும்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்