மட்டக்களப்பு ஊடாக கதிர்காமம் நோக்கிய பாதை யாத்திரைகள்

Report Print Kumar in மதம்

கதிர்காம கந்தனின் உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து அதிகளவான பக்தர்கள் கதிர்காமத்திற்கு பாதை யாத்திரையினை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்த மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், பாதை யாத்திரையில் பெருமளவான பக்தர்கள் பாதை யாத்திரையாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.

வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து செல்லும் பாதையாத்திரை குழுவினர் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் தங்களது பாதை யாத்திரைகளை தொடர்ந்து செல்கின்றனர்.

திருகோணமலை - வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான பாதையாத்திரை குழுவினர் இன்று மட்டக்களப்பினை வந்தடைந்துள்ளனர்.

மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்டவர்கள் மட்டக்களப்பு - ஆனைப்பந்தி சித்திவிநாயகர் ஆலயத்தில் தங்கியிருந்து நாளை தமது கதிர்காம யாத்திரையினை தொடரவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் துரைசாமி வேல்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்