கங்கை தாங்கிய ஆறு அக்கினிப் பொறிகள் தான் முருகன்

Report Print Akkash in மதம்

கார்த்திகை விரதம் முருகப் பெருமானைக் குறித்துக் அனுஷ்டிக்கப்படும் விரதம் ஆகும்.

கொழும்பில் இன்று (28) மிக சிறப்பாக கார்த்திகை விரதம் பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

பன்னிரண்டு வருடங்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்த பின் உத்யாபனம் செய்யலாம்.

திருக்கார்த்திகை விரதத்துக்கு இஸ்தமன வியாபகம் முக்கியம். அதாவது மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரத நாளாகும்.

திருக்கார்த்திகைத் தீபம் என்று இத்தினத்தில் தீபங்களை ஏற்றிவைத்து சோதிவடிவில் இறைவனை வழிபடுவர்.

சிவராத்திரி நாளில் பிரமவிஷ்ணுக்களுக்குத் தமது சோதிவடிவை இறைவன் காட்டிய பொழுது அவ்வடிவைத் தமக்கு என்றும் காட்டியருள வேண்டுமென அவர்கள் வேண்டினர்.

அதற்கு இறைவன் திருக்கார்த்திகை நாளில் மீண்டும் இவ்வரவை காட்டுவோம் என்றார்.

அதனை நினைவு கூர்ந்தே கார்த்திகைத் தீபநாள் கொண்டாடப்படுகின்றது என்ற வரலாற்று கதையும் உண்டு.

முருகன் பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப் பட்டாலும், அவரைப் பாலூட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்கினிப் பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டார்.

அவர் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப் படுகின்ற வரலாற்று கதையும் உண்டு.

இப்படிச் சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் “சரவணபவ” என்னும் ஆறு எழுத்தே ஆகும்.

நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணகிரியார் கூற்று.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments