ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்துக்கு உரிய மாதங்களில் புரட்டாசி முக்கியமானதாக திகழ்கிறது.
ஏழுமலையானுக்கு புரட்டாசி மாதம் சிறப்பானது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியை தரும்.
துன்பங்கள் விலக, தோஷங்கள் நீங்க புரட்டாசியில் காக்கும் கடவுளான மகா விஷ்ணுவை வணங்குதல் நலம். புரட்டாசி சனிகிழமைகளில் விளக்கேற்றி, பூஜை செய்து, அன்னதானம் செய்தால் கடவுளின் அருள் பூரணமாக கிடைக்கும்.
புரட்டாசியில் ஆஞ்சநேயர் சுவாமியை வணங்கிணால் சனி விலகும் என்றும் சாஸ்திரங்கள் சொல்கின்றன. இதற்கு புகழ் பெற்ற ஒரு புராண கதையும் உண்டு.
ஒரு சமயம் ஆஞ்சநேயரை பிடிக்க சனி பகவான் அவரிடம் தொடர்ந்து அனுமதி கேட்டு நச்சரித்து வந்தார்.
சரி என்று ஒரு தடவை சொன்ன ஆஞ்சநேயர் தன் தலை மீது ஏறி உட்காரும் படி சனிபகவானிடம் கூறினார். அவரும் ஏறி உட்கார, ஒரு பாரங்கல்லை எடுத்த ஆஞ்சநேயர் அதை சனி பகவான் தலையில் வைத்தார்.
பாரம் தாங்காத சனி பகவான் தன்னை விடிவிக்குமாறு ஆஞ்சநேயரிடம் மன்றாட அவரோ, என்னையும் என் பக்தர்களையும் நீ பிடித்து வைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என கூறும் படி சொல்ல சனி பகவானும் அதற்கு அடி பணிந்தார்.
அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்குபவர்களை சனி பகவான் பிடிப்பதில்லை என்று நம்பப்படுகிறது.