மக்களோடு வாழ்ந்தவர் கர்த்தர்

Report Print Gokulan Gokulan in மதம்
38Shares
38Shares
lankasrimarket.com

பைபிளிலுள்ள ஒரு வசனத்தில், “அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள். நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன். அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவாய்,” என கூறப்பட்டுள்ளது.

பூமியையும், வானத்தையும், அண்ட சராசரங்களையும் படைத்தவர் ஆண்டவர். அவர் சகல பூமியையும் ஆண்டு கொண்டிருக்கிறார்.

தாம் தெரிந்து கொண்ட ஜனத்தின் மத்தியில் வந்து மனிதனாக வாசம் பண்ணுவேன் என்று அறிவித்ததை, சகரியா என்ற தீர்க்கதரிசி மக்களிடம் சொன்னார். ஆனால், ஜனங்கள் அவரை பைத்தியக்காரன் என்று சொல்லி இகழ்ந்தார்கள். ஆனால், ஆண்டவர் 500 வருடங்களுக்கு பின் இயேசு கிறிஸ்துவாக அவதாரம் எடுத்து 33 வருடங்கள் மக்களுடன் வாழ்ந்தார்.

பைபிளில், “சீயோன் குமாரத்தியே! கம்பீரித்துப் பாடு. இதோ, நான் உன் நடுவில் வந்து வாசம் பண்ணுவேன்,” என்று அவர் சொல்லியிருக்கிறார். அவர் மீண்டும் வருவதாக வாக்களித்துள்ளார். அந்த நாளுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

- Dina Malar

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்