ஆண்டவர் கூறும் வெற்றியின் ரகசியம்

Report Print Gokulan Gokulan in மதம்
91Shares
91Shares
lankasrimarket.com

சோதனை காலங்களில் மட்டுமல்ல, எந்நேரமும் கடவுளை பற்றிக் கொள்ள வேண்டும்.

தாய் குரங்கு மரம் விட்டு மரம் தாவும் போது, குட்டி அதை உறுதியாகப் பற்றிக் கொள்கிறது. பூனை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தாவும் போது, குட்டியை வாயால் இறுகப் பற்றி கொள்கிறது.

மனிதனும் இப்படியே. சோதனை வந்தால் கொஞ்சம் கூட அஞ்சாமல், ஆண்டவரை இறுகப் பற்றி கொள்ள வேண்டும். அப்படி பற்றும்போது, அவர் நம்மை நல்வழியில் நடத்திச் செல்வார்.

ஏசாயா என்ற தீர்க்கதரிசி பக்தி பற்றி கூறும்போது, “உம்மை (ஆண்டவர்) உறுதியாய் பற்றிக் கொண்ட மனதையுடையவன், உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” என்கிறார்.

நாம் ஆண்டவரைப் பிடித்துக் கொண்டால், அவர் நம்மை பிடித்துக் கொள்வார். இதுவே வாழ்க்கையின் வெற்றிக்கான ரகசியம்

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்