வாழ்விலும் தாழ்விலும் சமமான மனநிலை

Report Print Gokulan Gokulan in மதம்
59Shares
59Shares
ibctamil.com

“நேற்று வரை பங்களா வாசம், 'ஏசி' அறையில் துாக்கம், ருசியான உணவு.... இன்று பல காரணங்களால் நிலைமை மாறி விட்டது.

வியாபாரமும், தொழிலும் படுத்து விட்டது. பார்த்த வேலையும் பறிபோய் விட்டது. ஐயோ! என்னால் இனி இந்த பூமியில் வாழ முடியுமா?” என்று வருந்துவதும் தவறு.

நேற்று வரை கடும் ஏழ்மை, இன்று திடீரென வசதி வந்ததும் ஆட்டம்...இதுவும் தவறு. பைபிளில்,“தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும், பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்,” என்ற வசனம் உள்ளது.

ஆம்... ஏழ்மையிலும், செல்வ நிலையிலும் ஒரே மனநிலையுடன் இருக்க பயிற்சி எடுங்கள். சென்றதை நினைத்து வருத்தப்படுவது, வந்ததை நினைத்து மகிழ்வது ஆகிய உணர்ச்சிகளுக்கும் ஆட்படக் கூடா து. ஏனெனில் எதுவுமே நிரந்தரமல்ல.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்