ஆண்டவரை நம்பினால் நடக்காததும் நடக்கும்

Report Print Gokulan Gokulan in மதம்
132Shares
132Shares
ibctamil.com

இப்படி நடக்குமா?' 'அப்படி நடக்குமா?' என்ற சந்தேகம் தேவையில்லை. ஆண்டவர் மீது பாரத்தைப் போட்டு விட்டால் நடக்க வேண்டியது நன்றாக நடக்கும்.

ஒரு பாதிரியார், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தி வந்தார். ஆயிரம் குழந்தைகள் இருந்தனர். அன்று சமைக்க பொருட்கள் இல்லை.

“குழந்தைகள் சாப்பிட என்ன செய்வார்கள்?” என பாதிரியார் வருந்தவில்லை. தேவனிடம் சென்றார்.

“தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிப்பவருமாய் இருக்கிறார்,” என்ற வசனத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தார்.

சற்று நேரம் கழிந்தது. குழந்தைகள் வழக்கம் போல் தட்டுகளுடன் உணவறையில் அமர்ந்து விட்டனர்.

அப்போது சில லாரிகள் அங்கு வந்தன. அதில் இருந்து ஏராளமான உணவு பாத்திரங்கள் இறக்கப்பட்டன. அவை குழந்தைகளுக்கு பரிமாறப்பட்டன. என்ன ஏதென்று விசாரித்த போது, அவ்வூரில் நடக்க இருந்த ஒரு நிகழ்ச்சி திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வரவிருந்த ஆயிரக்கணக்கானோர் வர இயலாத நிலை. எனவே, அவர்களுக்காக சமைத்த உணவு வீணாகி விடக்கூடாது என்பதால், இங்கு வந்து குழந்தைகளுக்கு கொடுத்ததாக வந்தவர்கள் கூறினர்.

ஆண்டவர் மீது பாரத்தைப் போட்டு விட்டால் நல்லதே நடக்கும்.

- Dina Malar

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்