வேற்றுகிரக வாசிகள் எங்க இருக்காங்க? தேடி கண்டுபிடிக்கும் தொலைநோக்கி

Report Print Fathima Fathima in விஞ்ஞானம்
வேற்றுகிரக வாசிகள் எங்க இருக்காங்க? தேடி கண்டுபிடிக்கும் தொலைநோக்கி

வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் எந்த மாதிரியான தோற்றத்துடன் இருப்பார்கள் என பல கேள்விகள் நம் மனதில் எழும்.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது.

ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம்.

ஒருவேளை அவர்கள் இருந்தால் கண்டுபிடிப்பது சுலபம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வேற்றுகிரக வாசிகளை கண்டறியும் முயற்சியில் பல்வேறு விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர், இதற்காக சீனா மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை அமைக்க திட்டமிட்டுள்ளது.

தென் மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில், 1.2 பில்லியன் யுவான் செலவில் அமைகிறது.

Sky Eye என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த தொலைநோக்கியால், 11 மில்லியன் ஒளிஆண்டுகளுக்கு அப்பாலும் பார்க்க முடியும்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இதன் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் இருப்பதால் விரைவில் வேற்றுகிரகவாசிகள் பற்றிய உண்மை வெளிச்சத்துக்கு வரும் என நம்பப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments