பூமியில் நுழைந்த மர்மப் பொருள்: அதிர்ச்சியில் நாசா?

Report Print Nivetha in விஞ்ஞானம்
பூமியில் நுழைந்த மர்மப் பொருள்: அதிர்ச்சியில் நாசா?
1503Shares

பூமியின் வளிமண்டலத்தில் திடீரென மர்மப் பொருள் ஒன்று நுழைந்ததால், நாசா தனது நேரடி ஒளிபரப்பினை இடைநிறுத்தம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா சர்வதேச விண்வெளி மையத்தின் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பியது.

அப்போது திடீரென பூமியின் வளிமண்டலத்தில் மர்மப் பொருள் ஒன்று தென்பட்டதால் நேரடி ஒளிபரப்பினை நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.

இந்த விபத்து ஜூலை மாதம் 9ஆம் திகதி இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை UFO Hunter ஒருவர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஆறு வருடங்களாக சர்வதேச விண்வெளி நிலைய நிகழ்வுகளை பார்த்து வருவதாகவும், நிச்சயமாக இது விண்கல்லாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது சீனாவின் விண்வெளி நிலையத்தின் சரக்கு கப்பலான Tiangong-1 அல்லது Tangong-2 ஆக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை மறுத்துள்ள நாசாவின் ஊடக பேச்சாளர், இதுபோன்ற மர்ம பொருட்கள் நுழைவது போன்ற வீடியோவை UFO Hunter -கள் வெளியிட்டு நாசாவை குற்றம்சாட்டுவது முதன்முறையல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments