முதன் முறையாக செயற்கையாக உருவாக்கப்பட்ட கரு மற்றும் விதைகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கருக்கள், இழையங்களை விஞ்ஞானிகள் பெட்ரிக் கிண்ணத்தில் வைத்து வளர்ப்பார்கள்.

ஆனால் உலகிலேயே முதன் முறையாக செயற்கையாக உருவாக்கப்பட்ட கரு மற்றும் விதைகள் இதே முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இவை இரண்டு வகையான ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு வகை ஜெல்லினைக் கொண்ட குமிழ் வடிவ பெட்ரிக் கிண்ணத்தில் இவை வளர்க்கப்படுகின்றன.

இதற்கு முதல் ஸ்டெம் செல்களை உடலுக்கு வெளியே வைத்து வளர்ப்பது அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது செயற்கையான கரு மற்றும் விதைகள் இதே முறையில் வளர்க்கப்படுவது விஞ்ஞான உலகின் வெற்றி கலந்த ஆச்சரியமாக பார்க்கப்படுகின்றது.

பிரித்தானியாவின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இந்த சாதனையைப் புரிந்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments