பூமியை இன்று கடந்து செல்கிறது TC4 விண்கல்

Report Print Fathima Fathima in விஞ்ஞானம்
155Shares
155Shares
Promotion

பூமியை இன்று சுமார் 42,000 கிமீ தொலைவில் TC4 விண்கல் கடந்து செல்லவிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சுமார் 15 முதல் 20 மீட்டர் வரை அகலம் கொண்ட TC4 விண்கல்லால் பூமிக்கு எந்தவித ஆபத்துமில்லை எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எனினும் விண்கற்களால் பூமிக்கு ஆபத்து நேரிடும் நிலையில், நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்கள் எவ்வாறு செயல்படும் என்பதை TC4 வருகையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதற்கு முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 12ம் திகதி அண்டார்டிகா கண்டத்துக்கு மிக அருகே இந்த விண்கல் கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்