செயலிழந்த செயற்கைகோள்கள் எங்கே குப்பையாக சேமிக்கப்படுகிறது தெரியுமா?

Report Print Arbin Arbin in விஞ்ஞானம்

உலகின் பல்வேறு நாடுகளால் விண்வெளிக்கு செயற்கைகோள்கள், விண்வெளி ஆராய்ச்சிக்கலன்கள் என சமீப காலமாக அதிகம் அனுப்பப்படுகின்றன. மிகக்குறிப்பாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஏராளமான செயற்கைகோள்கள், விண்வெளி கலன்களை அனுப்பியிருக்கிறது.

இந்த செயற்கோள்கள், சில விண்கலன்கள் தனது வட்டப்பாதையிலிருந்து விலகினால் எங்கு விழுகின்றன? ஆயுட்காலம் முடிந்த பிறகோ வேறு சில காரணங்களுக்காகவோ மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்படும் விண்கலன்கள் எங்கு விழச்செய்யப்படுகின்றன என்ற தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் அமெரிக்க பகுதிகளுக்கு இடையில் இருக்கும் தென் பசிபிக் கடல் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி ‘பாயிண்ட் நிமோ’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

‘நிமோ’ என்பதற்கு இலத்தீன் மொழியில் யாருமே இல்லாத என்று பொருள். இந்த பாயிண்ட் நிமோ பகுதிதான் உலகின் மிக தூரமான பகுதியாகும். இந்தப்பகுதியில் இதுவரை மனித சஞ்சாரமே நடந்ததது இல்லை. நாசா விண்வெளி மையம் செயற்கைகோள்களை விண்ணிலிருந்து கீழிருக்கும் போதும், விண்வெளிக்கலன்களை ஆயுட்காலத்தை முடித்து அவற்றை நீக்கும் போதும் இந்த ‘பாயிண்ட் நிமோ’ பகுதியில் தான் விழுமாறு செய்யப்படுகின்றன.

மனிதர்களே சஞ்சாரிக்காத இந்த பகுதிதான் நாசாவின் தொழில்நுட்ப குப்பைத்தொட்டியாக இருந்து வருகிறது.

சிறிய விண்கலன்கள் பூமிக்கு வரும் போதே விண்வெளி, பூமிக்கு இடையிலான வெப்பநிலை வேறுபாடுகளால் எரிந்து அழிந்துவிடும். ஆனால், பெரிய கலன்கள் வரும்போது அவை அதிவேகமாக பூமியை நோக்கி வரும். அத்தகைய, விண்கலன்களை இதுபோன்ற இடங்களில் விழச்செய்வது ஒருவகையில் பாதுகாப்பனது என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்