பூமிக்கு பெரும் ஆபத்து: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

Report Print Kabilan in விஞ்ஞானம்
422Shares
422Shares
lankasrimarket.com

காற்று மண்டலத்தில் மாசு அளவு மிகவும் அதிகரித்திருப்பது பூமிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பருவநிலை மாற்றம் மற்றும் பூமியில் அதிகரித்து வரும் மக்கள்தொகை, அவர்களால் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும் புகை காரணமாக சுற்றுப்புற சூழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வனப்பகுதிகள் அழியும், சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும், கடல்வாழ் உயிரினங்கள் அழியும், கடல்நீர் மட்டம் உயர்ந்து பேரழிவு ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

மேலும், இதே நிலைத் தொடர்ந்தால் பூமிக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என, 184 நாடுகளை சேர்ந்த 15,000 விஞ்ஞானிகள் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

இதனை ’மனித குலத்துக்கான எச்சரிக்கை’ என்ற தலைப்பில் ‘பயோ சயின்ஸ்’ அறிவியல் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இதேபோல, இதற்கு முன்னும் கடந்த 1992ஆம் ஆண்டு, 1700 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட கடிதம் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்