கூகுள் பயன்படுத்தினால் இந்த நோய் வரலாம்: நிபுணர் எச்சரிக்கை

Report Print Raju Raju in விஞ்ஞானம்
205Shares
205Shares
ibctamil.com

கூகுள் பயன்படுத்துவோருக்கு மூளையின் நினைவாற்றலை தூண்டும் கிரேசெல்கள் எனப்படும் சாம்பல் நிற செல்கள் அழிந்து மறதி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என நிபுணர் எச்சரித்துள்ளார்.

சர்வதேச அளவில் டிமென்சியா எனப்படும் மறதி நோயால் 4 கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருகிற 2050-ம் ஆண்டில் இந்நோயினால் 13 கோடியே 10 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மறதி நோய்க்கு முறையான சிகிச்சை முறை இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில், பிரித்தானியாவை சேர்ந்த செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக நிபுணர் பிராங்கன் மூரே தலைமையில் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

மூரே கூறுகையில், மூளைக்கு வேலை கொடுத்தால் தான் அது ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அதற்கு நாம் வேலை கொடுப்பதில்லை.

மறந்து போன தகவல்களை மூளையை பயன்படுத்தி சிந்திக்காமல் கூகுள் போன்ற இணையதளத்தை கொண்டே தேடுகிறோம்.

இதனால் மூளையின் நினைவாற்றலை தூண்டும் கிரே செல்கள் எனப்படும் சாம்பல் நிற செல்கள் அழிந்து மறதி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்