விண்வெளி தொடர்பாடலின் வினைத்திறனை அதிகரிக்க நாசாவின் அதிரடி திட்டம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு ரேடியோ சிக்னல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் இதன் வினைத்திறன் குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

எனவே விண்வெளி ஓடங்களுக்கும், பூமிக்கும் இடையிலான தொடர்பாடல் வினைத்திறனை அதிகரிப்பதற்கு புதிய திட்டம் ஒன்றினை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கிவருகின்றனர்.

புதிய தொடர்பாடலில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதே அவர்களின் திட்டமாகும்.

இதன் மூலம் நிலைமைகளுக்கு ஏற்ப தீர்மானங்களை உடனுக்கு உடன் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் இப் புதிய திட்டம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers