ட்ரம்பின் திட்டம்: மீண்டும் நிலவிற்கு செல்ல முயற்சியா?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
124Shares
124Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் பல சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்து வருகின்றார்.

இதன் காரணமாக பல நாடுகளின் எதிர்ப்புக்களையும் சம்பாதிக்க நேர்ந்துள்ளது.

இதே போன்று தற்போது மற்றுமொரு அதிரடி திட்டத்தை செயற்படுத்த முனைந்து வருகின்றார்.

அதாவது நாசா விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவிற்கு அனுப்பி வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

வெள்ளை மாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

Apollo 17 எனும் விண்கலம் நிலவில் தரையிறங்கி 45 வருடங்களாகிவிட்டன.

இதனைக் கொண்டாடும் முகமாகவே இம் முயற்சியில் ட்ரம்ப் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எது எவ்வாறெனினும் இந்த திட்டத்தின் உள்நோக்கம் என்ன என்பது ட்ரம்பிற்கு மட்டுமே தற்போது வெளிச்சம்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்