செவ்வாய் கிரகத்தில் அகத்துறுஞ்சப்பட்ட நிலையில் நீர்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
271Shares
271Shares
lankasrimarket.com

பல வருட ஆராய்ச்சிகளின் பின்னரும் செவ்வாய் கிரகத்தில் வெளிப்படையாக நீர் இருப்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

எனினும் நீர் இருந்திருக்கலாம் என்பதற்கான சில தடயங்கள் மாத்திரம் சேகரிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தரையினால் உறுஞ்சப்பட்ட நிலையில் நீர் காணப்படலாம் என விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

அதாவது ஸ்பொஞ்ச் ஒன்றில் நீர் அகத்துறுஞ்சப்பட்டிருப்பதை போன்று இருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில் பூமியின் மேற்பரப்பினை காட்டிலும் 25 சதவீதம் அதிகமாக நீரை அகத்துறுஞ்சி வைத்திருக்கும் தன்மை செவ்வாய் கிரக மேற்பரப்பிற்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எவ்வாறெனினும் நாசா நிறுவனம் அடுத்ததாக அனுப்பவிருக்கும் புதிய ரோவர் விண்கலம் மூலமே இச் சந்தேகத்தினை தீர்த்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்