ஒரே நேரத்தில் மூன்று செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சீனா சாதனை

Report Print Kabilan in விஞ்ஞானம்
89Shares
89Shares
lankasrimarket.com

மூன்று செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சின்குவான் ஏவு தளத்தில் இருந்து, 3 செயற்கை கோள்கள் மார்ச்-2சி என்னும் ராக்கெட்டின் உதவியுடன் இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் மூன்று செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது சாதனையாக கூறப்படுகிறது.

இது குறித்து சீன விண்வெளி ஆய்வு மையம் கூறுகையில், ‘விண்ணில் செலுத்தப்பட்டுள்ள மூன்று செயற்கை கோள்களும், சரியான வட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

அவை அனைத்தும் திட்டமிட்டப்படி சிறப்பாக செயல்படுகின்றன. மேலும், புவி காந்த புலத்தை ஆய்வு செய்வதில், இந்த 3 செயற்கை கோள்களும் முக்கிய பங்கு வகிக்கும்’ என தெரிவித்துள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்