புத்தாண்டில் இணையம், மொபைல் சேவை ஸ்தம்பிக்கலாம்: அச்சம் தெரிவித்த நிபுணர்கள்

Report Print Arbin Arbin in விஞ்ஞானம்
108Shares
108Shares
lankasrimarket.com

சூரியனில் இருந்து வெளிப்பட்ட மின் காந்த புயலின் தாக்கம் இந்த புத்தாண்டில் பூமியை தாக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் மொபைல் சேவை, இணையம், தொலைக்காட்சி மற்றும் செயற்கைக்கோள்கள் உள்ளிட்டவை ஸ்தம்பிக்கலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சூரிய கோளானது அடிக்கடி சூரிய துகள்கள் மற்றும் காந்த புலங்களை விண்வெளியில் வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் இதில் பாரிய புயல் வெளிப்படும் என்றால் அது பூமியில் பாதிப்பை உண்டாக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படியான பாரிய புயல் ஒன்று சமீபத்தில் சூரியனில் இருந்து வெளிப்பட்டுள்ளதாகவும் அது புத்தாண்டில் பூமியை தாக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனால் இணையச் சேவைகள், மொபைல் சேவைகள் மற்றும் தொலைக்காட்சிகள் என அனைத்தும் பாதிக்கப்படலாம் என கூறுகின்றனர்.

குறித்த புயலானது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் என்ற கணக்கு இதுவரை பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள நிபுணர்கள்,

1859 ஆம் ஆண்டு ஏற்பட்ட இதுபோன்ற பாரிய புயல் ஒன்று பூமியை கடுமையாக தாக்கியதாக சான்றுகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்