பாரிய நிலநடுக்கத்திற்கும் நிலவிற்கும் தொடர்பு இருக்கின்றதா? வெளியானது புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
280Shares
280Shares
ibctamil.com

பூமியின் துணைக் கிரகமான நிலவின் அசைவிற்கும் பூமியில் ஏற்படும் பாரிய நிலநடுக்கங்களிற்கும் தொடர்பு இருக்கின்றதா என்பதை அடிப்படையாகக் கொண்டு அண்மைக் காலமாக ஆய்வுகள் இடம்பெற்று வந்துள்ளன.

இந்நிலையில் இவ்விரண்டிற்கும் எதுவிதமான தொடர்புகளும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொரு கிரகங்களும் பாரிய திணிவினைக் கொண்டுள்ளன, இத் திணிவுகள் மற்றைய திணிவுகளில் தாக்கத்தை செலுத்துகின்றன.

அதாவது ஒரு கிரகத்தின் ஈர்ப்பானது மற்றைய கிரகத்தின் ஈர்ப்பில் செல்வாக்கு செலுத்தும், இதனை அடிப்படையாகக் கொண்டே மேற்கண்ட சந்தேகம் நிலவி வந்துள்ளது.

எனினும் நிலவின் ஈர்ப்பின் காரணமாக பூமியிலுள்ள கடல் மட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்