150 ஆண்டுகளுக்கு பின்னர் வானில் நிகழ உள்ள அற்புதம்

Report Print Kabilan in விஞ்ஞானம்
257Shares
257Shares
ibctamil.com

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வானியல் அற்புதமான ‘Super Blue சந்திர கிரகணம்’ வரும் ஜனவரி 31ஆம் திகதி நிகழவுள்ளது.

பூமியின் நிழலில் நிலவு கடந்து போகும் நிகழ்வே, ‘Blue Moon’ சந்திர கிரகணம் எனப்படுகிறது. மிகவும் அரிதான நிகழ்வான இது, 150 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழுமாம்.

கடந்த 1886ஆம் ஆண்டு, மார்ச் 31ஆம் திகதி தோன்றிய இந்த ‘Blue Moon சந்திர கிரகணம்’, தற்போது மீண்டும் வரும் 31ஆம் திகதி ஏற்படப் போகிறது. இது மூன்று தனித்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக ஏற்படும்.

முதலாவதாக, வரும் ஜனவரி 31யில் சந்திரன், பூமிக்கு மிக அருகில் உள்ள அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலை கொண்டிருக்கும். இதன் மூலம், வழக்கமான நிலவொளியை விட 14 சதவித கூடுதல் வெளிச்சத்தை நாம் காண முடியும்.

இரண்டாவதாக, ஒவ்வொரு மாதத்திலும் ஒரு முறையே முழு நிலவினை காண முடியும். ஒவ்வொரு முழு நிலவும் 29 நாட்களுக்கு ஒரு முறையே காண முடியும்.

ஆனால், ஜனவரி 1ஆம் திகதியே தோன்றிய முழு நிலவு, மீண்டும் மாதக் கடைசியான 31ஆம் திகதி தோன்ற உள்ளது. இதுவே ‘Blue Moon' என்று கூறப்படுகிறது.

எனினும், மூன்றாவதாக நிகழும் முழு சந்திர கிரகணமே, இதனை மிகவும் அரிதான, தனித்துவம் வாய்ந்தததாக காட்டுகிறது. அதாவது, பூமியின் நிழலில் நிலவு கடந்து போகும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்