செவ்வாய் கிரகத்தில் செல்பி: வைரலான நாசாவின் வீடியோ

Report Print Athavan in விஞ்ஞானம்
506Shares
506Shares
ibctamil.com

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தின் மலைமுகடு மற்றும் பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கியவாறு எடுத்துள்ள செல்பி போட்டோ ஒன்றை நாசா வெளியிட்டது உலக அளவில் வைரலாகியுள்ளது.

சிவப்பு கோள் என அழக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய 2011 ஆம் ஆண்டு அமெரிக்கவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கியூரியாசிட்டியை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது.

இது தற்போது செவ்வாய் கிரகத்தில் துல்லியமான பள்ளத்தாக்கு ஒன்றை ஆராய்ந்து வருகிறது, அதுகுறித்த புதிய படங்கள் கியூரியாசிட்டி ரோவரால் எடுக்கப்பட்டுள்ளன.

ஆறு போன்ற திரவம் ஓடிய தடங்களை கொண்டது போல் அந்த புகைப்படம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வருட விண்பயணத்திற்கு பின் 2012ம் ஆண்டு செவ்வாயில் கியூரியாசிட்டி தரையிரங்கியது. அது முதல் சுமார் 28 மைல்கள் செவ்வாய் கிரகத்தில் பயணித்து கிட்டதட்ட 2,24,000 புகைப்படங்களை செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு கியூரியாசிட்டி ரோபோ அனுப்பியுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்